
யாரும்
யாருக்கும் தேவையற்ற உலகில்
எது குறித்தும்
உறுதியோடு இராதே
அவர்கள்
உன்னை போல் அல்லர்
யாரோடும்
பொருந்தி போகும் தகைமையாளர்
உன்னை தனிமை படுத்தி
அகற்றுவர்
யாரையும்
எதற்காகவும்
எதிர்பாத்திராதே
அவர்கள் வரமாட்டார்கள்
தரமாட்டார்கள்
யார்பொருட்டும் அழாதே
யார்பொருட்டும் மகிழாதே
அவர்கள்
உன் அழிவில் மகிழ்பவர்
உன் செழிப்பில் அழுபவர்
உடன் வரும் ஓரிருவரும்
உடன்பட்டு வரவில்லை என்றறி
இதில் கவிதையை தேடாதே
நான் இப்படித்தான்
மகத்தான பேருண்மைகளை
மறைந்து சொல்ல வேண்டிய
கண்காணிப்பில் இருக்கிறேன்.