சனி, 23 மே, 2009

புணர்தல் - மகுடேஷ்வரன்





வருந்துகிறேன்

சிலரை புனர்ந்தற்க்காகவும்

சிலரை புணர முடியாமல்

போனதற்காகவும்.





"உன்னை புணர விரும்புகிறேன்" என்று

நேரடியாக கூற இயலவில்லை


நூதனமாக ஆரம்பிக்கிறேன்

"உன்னை விரும்புகிறேன்" .





பெற்ற தாயை

பேணிய தகப்பனை

உற்றார் உறவினரை

உகந்த நட்பை


ஓர் நொடிக்குள் உதறும்

புணர்ச்சி விழைவு.





எத்தனை வருடங்கள்

ஆனாலும்


உடலை அறிந்த அளவு

அறிய முடியாது போல

மனதை.





சன்யாசிக்கும்

சம்சாரிக்கும்

சின்ன வேறுபாடு


சன்யாசிக்கு அலுத்து விட்டது

அவ்ளோதான்.





நமது காதலும்

புனிதமாகத்தான் இருந்தது


நாம் புணரும் வரை.





ஆணாதிக்கம் என்பது

காரியம் முடிந்தவுடன்

திரும்பி படுத்துக்கொள்வது.






ஓடிப்போகிறவர்

முதலில் செய்கிற காரியம்


உள்ளம் திகட்ட

உயிர் அதிர புணர்வதுதான்.





சமுகவிதி இதுதான்


புணர்ந்து விட்டால்

மணந்து கொள்


அல்லது


மணந்து கொண்டு

புணர்ந்து கொள்.





புணர்ச்சிக்கு பின்பு

சுருங்குகிறது கனிவு

தடிக்கிறது உத்தரவு.





விடிந்ததும்


ஒன்றும் நடவாதது போல் நடந்து கொள்கிறது

இரவெல்லாம் புணர்ந்த இவ்வுலகு.





மரணப் படுக்கையில் இருப்பவரின்

ஞாபகத்தில்லாடும்

கடைசி முகங்களில் ஒன்று


ஒரு வேசியுனுடயாதாகவும்

இருக்கலாம்.