
ஊமையாய் இருக்கத்தான்
நினைக்கிறேன்
என்ன வேண்டுமானாலும்
சொல்லி கொள்ளுங்கள்
என்று
வாதத்தில் விதைப்பவை
வார்த்தைகள் என்றாலும்
முளைப்பவை வலிகள் தானே..?
உளவியல் புரிந்து கொள்ள வேண்டும்...
சொல்ல நினைப்பதை
சொல்லாமல் மறைத்து
உனக்கு பிடித்ததை
சரியென்றால் சிரித்தும்
தவறென்றால் வெறுத்தும்
வேறுவேறு முகங்கள்
காட்டுகிறாய் நீ
இனி புதிய கோட்பாடுகளை
உருவாக்கி கொள்ள வேண்டும் நான்
அப்போதுதான்
உறவுகள் பிழைக்கும்
சிலுவையில் அறையபடாமல்.