புதன், 24 ஜூன், 2009



வயிற்றை அழுத்தும் சிசு

கல்லாய் கனக்கிற மார்பகங்களை

கையிலேந்தியபடி கதறுவாய்

'முக்கு முக்கு

முக்கித் தள்ளு '

ஒரு மகப்பேறு மருத்துவரும்

கிழட்டு தாதியும்

அறைக்கு வெளியே உன்

அன்பான கணவன்

ஆவல் மிக்க காலடியோசைகள்

'முக்கு முக்கு

சிக்கிரம்'

அதட்டல் தொடரும்

உன் கண்களில்

மின்னல் தெறிப்புரும்.

கன்னப் பொருத்துகள் நடுக்கமுறும்

அகல விரித்த கால்கள் விறைக்கும்

இடுப்பு சரிவு அடிவயிற்றையும் மீறி

தொடைகளில் நடுவிநூடாக uyirai

உயிரை பிளக்கிற

வலிப்பு சுழி

உதடுகளை தின்கிற பற்களை மீறி

ஓலைமிட்டழும் உன் குரல்

இனி

தொடை நடுவு கிழிபடும்

உன்

இத்தனை நாளைய

சுமப்பும் நோவும்

வேதையுடனான வீறிடளும்

அர்த்தமிழந்து போக

வெறும் ஆவலுடனான

பாத சரசரப் ஒன்றே

முதன்மையுரும் வகையில்

உன்

தொடைகளின் நடுவே

ரத்த வெள்ளத்தில்

ஜனிக்கும்

உன்


சிசு.


திங்கள், 22 ஜூன், 2009



பற்றற்று வாழ


பழகிக்கொள்



ஞானிகள் துறவிகள்


உபதேசிக்கிறார்கள்



அவர்களை



சந்திக்கும் வரை


கேலியாய் தெரிந்தது


உபதேசம்.



நேசிப்புக்கு பிறகான


வாழ்க்கை உணர்த்துகிறது



பற்றற்று


வாழ மட்டுமல்ல...


சாகவும் பழகிக்கொள்.

செவ்வாய், 26 மே, 2009


அகதிகளில்லை யாரும்

அவர்களிடம் சுமக்க முடியாத

துயரங்களிருக்கின்றன

வயல்களை , மரங்களை

பழகிய கடற்கரைகளை

நேசித்த பாதைகளை

கொண்டு வரவில்லை அவர்கள்



வெறுங்கையோடு நின்றவர்களை

நீர்ப்பறவைகள்

அழைத்து வந்திருக்கின்றன

நிரந்தரமாக அவர்களால்

இனி ஓய்வெடுக்க முடியாது

ராத்திரிகளை அகதிகள்

சாதரணமாக கடந்திட முடியாது



எப்போதும் அவர்களிடம்

விடுதலைப் பற்றிய பசியிருக்கும்

தன் நிலத்துக்கு திரும்பி செல்லும்

கனவிருக்கும்

யுத்தங்கள் வாழ்க்கையை

தின்ற கதைகளிருக்கும்

அவர்களின் தொடரும் கண்ணீர்

கடந்து வந்த

சித்ரவதைகளை சொல்லி கொண்டிருக்கும்

களத்திலிருந்து இனி திரும்பவே

முடியாதவர்களை பற்றிய செய்திகளிருக்கும்

இரவெல்லாம் புரண்டுபடுத்தபடியே

கிடப்பார்கள்



உறக்கம் அவர்களிடம்

தோற்று போயிருக்கும்

அவர்களின் இன்றைய தேவை

வெறும் வார்த்தைகளல்ல



உயத்திய கரங்கள்

அழுத்தமாக ஒலிக்கும் குரல்கள்

சங்கிலி தொடராய்

இணைந்த கைகள்

அடக்கு முறையை

எதிர்த்து நிற்கும்

அணிவகுப்புகள்.

திங்கள், 25 மே, 2009


பாலஸ்தீனப் போராளிகள் பற்றி


நான் பேசலாம்


அயர்லாந்து சுதந்திர போராட்டம் பற்றி


நான் எழுதலாம்


தியான்மென் சதுக்க கொலைகளுக்கும்


நான் குரல் கொடுக்கலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



இராக் பற்றி


நான் கவலைப்படலாம்


திபெத்தியர்களுக்காக


நான் கண்ணீர் விடலாம்


பர்மியப் பெண்ணுக்கும்


நான் பரிந்து பேசலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



சேகுவராவை


நான் கொண்டாடலாம்


ஃபிடல் காஸ்ட்ரோவை


நான் வணங்கலாம்


கொசோவா விடுதலையை


நான் ஆதரிக்கலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



உலகின் எந்த மூலையில்


இனப்படுகொலை நடந்தாலும்


நான் மனிதாபிமானி ஆகலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



எங்கு உள்ளது எனத்தெரியாத


நாட்டைப் பற்றி


நான் பேசலாம்


நான் எழுதலாம்


நான் குரல் கொடுக்கலாம்


நான் வருத்தப்படலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



ஆனால்


என் கண்ணுக்கெட்டும் தூரத்தில்


கண்ணீர்த் துளியாய்


கடலுக்குள் கிடக்கும்


நாடு பற்றி மட்டும்



நான்


எதுவும் பேசக்கூடாது


எதுவும் எழுதக்கூடாது


எதுவும் சொல்லக்கூடாது


எதற்க்கும் குரல் எழுப்பக்கூடாது



ஏனென்றால்


நான் ஒரு தமிழன்



- பவுத்த அய்யனார்



பயணத்தில் உங்கள் இருக்கையில்

இன்னொருவர் அமர்ந்து கொண்டு

எழமறுத்தால் என்ன செய்வீர்கள்..?


சாலையில் உங்கள் வாகனத்தை

இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்

என்னசெய்வீர்கள்..?


உங்கள் குழந்தையை பள்ளி ஆசிரியர்

காயம் வர அடித்துவிட்டால்

என்ன செய்வீர்கள்..?


பேருந்தில் உங்கள் மகளை

இன்னொருவர் உரசுவதை பார்த்தால்

என்ன செய்வீர்கள்..?


உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி

சில அந்நியர்கள் புகுந்தால்

என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்..?


இறையாண்மை பேசுவீர்களோ..?


இதற்க்கெல்லாம்...

எதிர்த்தாலே தீவிரவாதம் எனில்

இலங்கையில் நடப்பது அதே நண்பா


- செழியன்

வெடிக்கிறது
அழுகை
இயலாமையின் எல்லாவகை
வெளிப்படுதல்களுடனும்

கனவின் கூர்மை கருகி
தீயுமிழ்ந்த கணத்தில்
வற்றிப்போன ஆறாய்
வெறுமையுற்று நிற்க்கிறோம்

புகைந்து கிளம்பிய
துயர நெடி பரவும்
காற்றின் அடுக்குகளில்
புதைந்து , இருக்கும்
உயிர்களின் இருப்பில்
வாழ்கின்றன பதுங்கு குழிகள்

ஆயுதங்கள்
ஏதுமற்ற குழந்தைகளின்
ஒலங்களில் கருகும் பூக்களில்
வாசனை என்றேதும் புலப்படாது

சிதறடிக்கப்பட்ட
தசைத்துணுக்குகள் நிறைந்த
நிலமெங்கும்
வெயிலில் வீசப்பட்ட மீனாய்
முடிவுறாத் துயரத்தின் பெருங்கற்கள்
உருள உருள கிடக்கிறது வாழ்க்கை

குண்டுகள் சிதைந்த
பென்சில்களையும் ஓவியங்களையும்

தீ தின்ற பின்
காலத்தின் வெம்மை தகிக்கும் கைகளில்
வரைய காத்திருக்கிறன அவர்கள்
விடுதலையை.


- யாழன் ஆதி

சனி, 23 மே, 2009



உண்டு


உடுத்தி


உழைத்து


உறங்கி கழிகிறது


என் ஒரு நாள்



என் வேதனையெல்லாம்


இதே நிகழ்ச்சி நிரலில்


என் ஒவ்வொரு நாளும் கழிகிறது


என்பதனால்.

புணர்தல் - மகுடேஷ்வரன்





வருந்துகிறேன்

சிலரை புனர்ந்தற்க்காகவும்

சிலரை புணர முடியாமல்

போனதற்காகவும்.





"உன்னை புணர விரும்புகிறேன்" என்று

நேரடியாக கூற இயலவில்லை


நூதனமாக ஆரம்பிக்கிறேன்

"உன்னை விரும்புகிறேன்" .





பெற்ற தாயை

பேணிய தகப்பனை

உற்றார் உறவினரை

உகந்த நட்பை


ஓர் நொடிக்குள் உதறும்

புணர்ச்சி விழைவு.





எத்தனை வருடங்கள்

ஆனாலும்


உடலை அறிந்த அளவு

அறிய முடியாது போல

மனதை.





சன்யாசிக்கும்

சம்சாரிக்கும்

சின்ன வேறுபாடு


சன்யாசிக்கு அலுத்து விட்டது

அவ்ளோதான்.





நமது காதலும்

புனிதமாகத்தான் இருந்தது


நாம் புணரும் வரை.





ஆணாதிக்கம் என்பது

காரியம் முடிந்தவுடன்

திரும்பி படுத்துக்கொள்வது.






ஓடிப்போகிறவர்

முதலில் செய்கிற காரியம்


உள்ளம் திகட்ட

உயிர் அதிர புணர்வதுதான்.





சமுகவிதி இதுதான்


புணர்ந்து விட்டால்

மணந்து கொள்


அல்லது


மணந்து கொண்டு

புணர்ந்து கொள்.





புணர்ச்சிக்கு பின்பு

சுருங்குகிறது கனிவு

தடிக்கிறது உத்தரவு.





விடிந்ததும்


ஒன்றும் நடவாதது போல் நடந்து கொள்கிறது

இரவெல்லாம் புணர்ந்த இவ்வுலகு.





மரணப் படுக்கையில் இருப்பவரின்

ஞாபகத்தில்லாடும்

கடைசி முகங்களில் ஒன்று


ஒரு வேசியுனுடயாதாகவும்

இருக்கலாம்.

செவ்வாய், 19 மே, 2009



ஜெயகாந்தனின் சிறந்த பத்து சிறு கதைகளை படிக்க கிழே கிளிக் செய்யுங்கள்.



pdf http://pm.tamil.net/pub/pm0198/jeyakant1.

ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பை படிக்க...

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0198.html

வியாழன், 14 மே, 2009

சே.பிருந்தா



காலடி பதிவை


க்விதையாக்கிவிட்டு போகும்


உன் கொலுசு சினுங்கள்...

புதன், 13 மே, 2009

நீங்கள் இறப்பதற்கான காரணங்கள்



அவ‌ள்


உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்


நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.






அவ‌ள்


த‌ன் துக்க‌ங்க‌ளை ப‌கிர்ந்து


புதிர்க‌ளுக்கான‌ முடிச்சுக‌ளை காட்டுகிறாள்


நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்


அவளை அவளாகவே.






நாட்க‌ள் க‌ழிய‌


உங்களை பிடிக்கும் என்கிறாள்


சொற்க‌ளை உங்க‌ளோடு புதைத்து


கொஞ்சமாகச் சிரிக்கிறீர்க‌ள்.






நேற்றுமில்லாத‌ இன்றுமில்லாத






த‌ருண‌த்தில்


உங்க‌ளின் அழ‌கின்மையை ப‌ட்டியலிட்டு


நீங்க‌ள்


க‌ட்டியிருந்த


ஆளுமையை சிதைக்கிறாள்


உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்.






தான்


சொன்னவை எதுவும் பொருளற்றவை


த‌ன்


சிக்க‌ல்க‌ளின் வெற்று பிம்ப‌ங்கள் என்கிறாள்.






நீங்க‌ள்


நிராக‌ரிக்க‌ எதுவுமில்லை


உண்மையின் வெம்மையில் க‌ச‌ங்க‌த் துவ‌ங்குகிறீர்க‌ள்


இந்த‌த் தார்ச்சாலையின் ம‌திய‌ வெயிலில்


வாகனத்தில் நசுங்குவது கூட


உங்களுக்கு


ஆசுவாசம் தரக்கூடும்.






க‌ண்ணீரில் க‌ரைய‌த் துவ‌ங்கும்


உங்களைப் பார்த்து செருப்புத் தைப்ப‌வ‌ன்


வ‌ருத்த‌ப்பட்டிருக்கலாம்.






உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை


உங்க‌ளின் துக்க‌ம் உங்க‌ளுக்கானது


இந்த‌க் க‌ண்ணீருக்கான‌ அர்த்த‌ம் முடிவ‌ற்றது


உற‌ங்க‌ச் செல்கிறீர்க‌ள்


இர‌வின் வெறுமை உங்க‌ளை விழிக்க‌ச் செய்கிறது.






அருகில் கிட‌க்கிற‌து ஒரு நைலான் க‌யிறு.

செவ்வாய், 12 மே, 2009

......




எப்போது எதனால்
எப்படி நேர்ந்தது
தெரியவில்லை.


திடுமென ஒரு கணத்தில்
தீர்மானிக்கப்பட்டிருக்க முடியாது.


மெல்ல மெல்லத்தான்
வர்ணங்கள் குழைத்து
இழை இழையாய்
பின்னப்பட்டிருக்க வேண்டும்.


தொய்வே இல்லாமல்
அடர்வாய் கனமாய்.


பூவின் மலர்வு போல
நம் நட்பின் பிரிவு.


சே.பிருந்தா

என்.....



பல சமயங்களில்
ஏன் என்ற கேள்வியில்
ஆரம்பித்து பெருத்த
அழுகையில் முடிவடைந்து
அழுகை தான் பதிலென்றாயிற்று.
இதற்குத் தீர்வோ பதிலோ யாரிடமுமில்லை இதுவரையில்
இனிமேலும்.
வாழ்க்கையை வாழச் சொல்லிவிட்டு
எங்கே போனாய்
என்னை விட்டு
என்...

சே. பிருந்தா


ஓடிக்கொண்டேயிருக்கிற நதி

போய்க்கொண்டேயிருக்கிற மேகம்

தினம் பூக்கிற மரம்

பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி

குரலெழும்பாமல் இசைக்கிற காற்று

வீடு முழுக்க வானம்

வானம் நிறைய பறவைகள்

அருகே, மிக அருகே

தொட்டுக்கொள்ளும் தூரத்தில்

என்றில்லாவிடினும்

என் குரல் கேட்கிற தொலைவில் நீ

இது போதும்,

இவை போதும்

வாழும்படிதான் இருக்கிறது -

வாழ்க்கை.

சே . பிருந்தா



நேரே கண்பார்க்க தயங்கி
தரை பார்ப்பினும் கண்கூசும்
உன் வீட்டு பளிங்கு தரை


சற்றே கோணம் திரும்ப

சுவரின் உயர்தர டிஸ்டம்பர்
கண்ணில் உறுத்தும்


பலபக்கம் வியூகம்

வைத்து எனை மூலையில் தள்ளிடும்
உன் வீடு.


என் கம்பீரம் குன்றி...
சிற்றெறும்பாய் சிறுத்து....

எனை நானாய்
என் வீட்டிலேயே இருக்கவிடு!

திங்கள், 11 மே, 2009

ஞாயிறு, 10 மே, 2009

மகுடேஷ்வரன் 1


ஊர்தோறும் சுடுகாடு


ஒருபோதும் குறையலியே


வாழ்க்கை பற்று.

மகுடேஷ்வரன்




கண்ணிருக்கு

ஆறுதல் சொன்னவர் ஒருவருமில்லை

கவிதைகளால்

யாரும் சலனமுறவில்லை

வெற்றிகளால்

அருகில் இருப்பவர் அமைதியிழக்கிறார்




அதிகபட்சம்

உன்னை அறிந்தோரிடம்

உனக்காக ஒரு கசந்த புன்னகையை

சிந்த செய்ய



உன் தரப்பை



ஒரு கணம் மனதில் நிறுத்த

மனப்பூர்வமாக

ஒருதுளி அனுதாபத்தை

சம்பாதிக்க

வேறென்ன வழியுண்டு.?




நீ



தற்கொலை செய்துகொள்வதை தவிர.





நேர்ந்தது - மகுடேஷ்வரன்


யாரும்


யாருக்கும் தேவையற்ற உலகில்


எது குறித்தும்


உறுதியோடு இராதே






அவர்கள்


உன்னை போல் அல்லர்


யாரோடும்


பொருந்தி போகும் தகைமையாளர்






உன்னை தனிமை படுத்தி


அகற்றுவர்






யாரையும்


எதற்காகவும்


எதிர்பாத்திராதே






அவர்கள் வரமாட்டார்கள்


தரமாட்டார்கள்






யார்பொருட்டும் அழாதே


யார்பொருட்டும் மகிழாதே






அவர்கள்


உன் அழிவில் மகிழ்பவர்


உன் செழிப்பில் அழுபவர்






உடன் வரும் ஓரிருவரும்


உடன்பட்டு வரவில்லை என்றறி






இதில் கவிதையை தேடாதே






நான் இப்படித்தான்


மகத்தான பேருண்மைகளை


மறைந்து சொல்ல வேண்டிய


கண்காணிப்பில் இருக்கிறேன்.

உயிர்ப்புடன் காதல் பாடல்களை கேட்டு மிக நீண்ட நாட்களாகிறது. அங்காடி தெருவின் சில பாடல்களை கேட்டு பாருஙகள்.


இலவசமாக பதிவிறக்கி கொள்ள கிழே கிளிக் செய்யுங்கள்


http://www.tamilmp3world.com/Angadi%20Theru.html

சனி, 9 மே, 2009

எனது கூடு


வெள்ளி, 8 மே, 2009

உறவுகள் - ருத்ரன்






















உறவுகள் சௌகரியமான பொய்கள். அவசியமான உண்மைகள். உதவும் பொய்களுக்கும் தேவையான உண்மைகளுக்கும் இடையேதான் வாழ்க்கை. வாழ்க்கை வாழ உறவுகள் தேவை.


உறவு என்பது இன்னொரு நபருடன் மட்டுமல்ல - இன்னொரு பொருளுடன் , உயிருடன் என்று எப்படியாவது இணைத்துக் கொள்ளும் ஒரு மனப்பான்மை.


இளைப்பாறிவிட்டு ? அந்த நிழலே போதும் என்றால் அதிலேயே தங்கிவிடலாம். அது தற்காலிகத் தேவைதான் என்று தெரிந்தால் வாழ்வின் பாதையை தொடரலாம் உண்மைகளைத்தான் தொடர வேண்டும் என்றில்லை : பொய்களையும் தொடரலாம். உண்மை நிஜத்தின் தரை , நடக்கத்தான் முடியும். ஆனால் பொய் ஒரு கனவின் விஸ்தாரம் - பறக்கவும் முடியுமெனும் ஆசையை நம்பிக்கையாக்கும் அரிதாரத்தின் ஆதாரம். பறப்பதற்கு சிறகுகள் அவசியம். நம் சிறகுகள் இந்த சமுதாய கூண்டில் வாழ்வதற்காக வெட்டப்பட்டவை. வெட்டிவிட்ட பச்சைக்கிளி , "ஜோசியம் சொல்லி" தீனி பெறுவதை போலத்தான் வாழ்கிறோம். கூண்டுகள் நமக்கு சிறையாக தோன்றுவதில்லை , பாதுகாப்பாக தெரிகின்றன. சின்ன சின்ன சந்தோஷங்களே போதும் என்ற கூண்டு கிளி மனப்பான்மையே நம் சமுக இயக்கத்தை நிர்ணயிக்கிறது. சமூகத்திடம் பெரும் சிறு தீனியே மனப்பசியை தீர்ப்பதால் , நம் வாழ்க்கை நிரந்தர நிம்மதியும் உற்சாகமும் தரும் தரிசனத்தை நோக்கிய தவமாக மாறுவதில்லை.

எத்தகு நம்பிக்கையை

சுமந்து நிற்கிறோம்



நேற்று

நம்பிக்கை செத்து



வேரறுத்த

நண்பியின் நினைவு புண்கள்

ஆறு முன்னரே

நம்புகிறோம் வாழ்வு பற்றி



எளிமை நிறைந்ததாக

அமைதி நிறைந்ததாக

சுதந்திரமானதாக

சுவையானதாக



நாளை



இவையும் செத்துபோக

அடி தாங்காய்

முறிவு கொள்ளாதே.



மேலும் மேலும் நம்பு

வாழ்வு பற்றி

உன் இருப்பு பற்றி

அதன் அர்த்தம் பற்றி

இன்னும் வலுவாய்.
- ஆகர்ஷியா

வியாழன், 7 மே, 2009


ஊமையாய் இருக்கத்தான்

நினைக்கிறேன்

என்ன வேண்டுமானாலும்

சொல்லி கொள்ளுங்கள்

என்று


வாதத்தில் விதைப்பவை

வார்த்தைகள் என்றாலும்

முளைப்பவை வலிகள் தானே..?


உளவியல் புரிந்து கொள்ள வேண்டும்...


சொல்ல நினைப்பதை

சொல்லாமல் மறைத்து

உனக்கு பிடித்ததை

சரியென்றால் சிரித்தும்

தவறென்றால் வெறுத்தும்

வேறுவேறு முகங்கள்

காட்டுகிறாய் நீ


இனி புதிய கோட்பாடுகளை

உருவாக்கி கொள்ள வேண்டும் நான்


அப்போதுதான்

உறவுகள் பிழைக்கும்

சிலுவையில் அறையபடாமல்.

புதன், 6 மே, 2009


முற்போக்கு


பிற்போக்கு



லீனியர்


நான் லீனியர்



இசங்கள் கசங்கள்


இத்யாதி இத்யாதி...


எதற்குள்ளும் இல்லை நான்


சிரமம் ஏன்..?


சிக்க வைக்க.



என் போக்கு


தனி போக்கு


வட்டமற்ற பெருவெளியே


சுகமெனக்கு.



மானுடம் முக்கியம்.


நல்லதும் கெட்டதுமாய்


பலமும் பலவினமுமாய்


மனுஷன் முக்கியம்.



அப்புறம்தான்

மற்றதெல்லாம்...


.